தேர்தல் வெற்றி: அ.தி.மு.க.- பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தேர்தல் வெற்றி: அ.தி.மு.க.- பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2019 4:15 AM IST (Updated: 25 Oct 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அ.தி.மு.க.வினரும், பா.ஜனதா கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 2 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதேபோல் அரியானா மாநிலத்திலும், மராட்டிய மாநிலத்திலும் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினரும், பா.ஜனதா கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அ.தி.மு.க.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கண்ணன், சந்திரன், லதா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து மீனாட்சிபுரம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பா.ஜனதா

இதேபோல் அரியானா, மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பிலும் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், மாவட்ட பார்வையாளர் தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story