விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சேலம்,
விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையறிந்த அந்த கட்சியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன் தலைமையில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணி, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, சேலம் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜசேகரன், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் குபேந்திரன், உடையாப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் அருண்குமார், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகேசன், பேளூர் நகர துணைச்செயலாளர் ஜெகதீசன், ஜெயசீலன், ஏற்காடு மாணவரணி செயலாளர் புகழேந்தி, சேலம் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேச்சேரி
இதேபோல், மேச்சேரி ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மேச்சேரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கலையரசன், சந்திரசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் அண்ணாமலை, சாமியண்ணன், மேச்சேரி முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார், மேச்சேரி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மாணிக்கம், மேச்சேரி கூட்டுறவு சங்க தலைவர் மணிவண்ணன், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சாமிநாதன், சின்னதம்பி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா, பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
இதேபோல் ஓமலூரிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பச்சியப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், பா.ம.க. மாவட்ட தலைவர் மாணிக்கம், அ.தி.மு.க. நகர செயலாளர்கள் சரவணன், கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் தங்கவேல், எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், தளபதி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வெற்றியை ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சி.ரஞ்சித்குமார் தலைமையில் ஆத்தூரில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில், பா.ம.க. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் குமாரசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து, முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய துணை செயலாளர் பெரியசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், இலக்கிய அணி செயலாளர் பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிளைக்கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேவூர்
தேவூர் பகுதியில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் வெற்றியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கட்சியின் தேவூர் நகர செயலாளர் குருசாமி தலைமையில், தேவூர், மேட்டுக்கடை, மைலம்பட்டி, கோணக்கழுத்தானூர், அம்மாபாளையம், புதுப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதேபோல் காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் சிவக்குமாரன் தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதேபோல் அரசிராமணி பேரூராட்சி குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்சியின் நகர செயலாளர் சாமியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தலைவாசல்
தலைவாசல் பஸ் நிலையத்தில் தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர்கள் மெய்யன், மதியழகன், செந்தில்குமார், சாத்தப்பாடி பால் சொசைட்டி தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வரகூர் ராமசாமி, பெரியசாமி, நாவக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story