‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான 3 மாணவர்கள் உள்பட 8 பேர் தேனி கோர்ட்டில் ஆஜர்
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 3 மாணவர்கள் உள்பட 8 பேர் நேற்று தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
தேனி,
‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதில் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் நேற்று முன்தினம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான், அவருடைய தந்தை முகமது ஷபி ஆகிய 6 பேரும் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 6 பேரையும் போலீசார் நேற்று தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 6 பேருக்கும் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
அதேபோல், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகிய இருவரையும் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களது காவலையும் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதியை மதுரை மத்திய சிறையிலும், மற்ற 6 பேரையும் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையிலும் போலீசார் அடைத்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட 8 பேரும் முகத்தை துணியால் மூடியபடி போலீசார் அழைத்து வந்தனர்.

Related Tags :
Next Story