தேவூரில் எலிமருந்தை தின்று சலூன் கடை உரிமையாளர் தற்கொலை
தேவூரில் எலிமருந்தை தின்று சலூன் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்,
கீழ்வேளூர் அருகே தேவூர் தெற்கு தெரு கச்சனம் சாலையில் வசித்து வந்தவர் கருப்பையா(வயது 48). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். குடிபழக்கத்திற்கு அடிமையான கருப்பையா தனது மனைவி, மகளிடம் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென கருப்பையா வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சசிகலா மற்றும் அக்கம்பக்த்தினர் கருப்பையாவை உடனடியாக தேவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேம்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், கருப்பையா எலிமருந்தை (விஷம்) தின்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Related Tags :
Next Story