கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிப்படைந்தனர்.
பெரம்பலூர்,
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்களை குறைக்கக்கூடாது. அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயாளிகள் பாதிப்பு
அவசர சிகிச்சைகள் பாதிப்பின்றி மற்ற பிரிவுகளை புறக்கணித்து டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், காரை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார அலுவலகங்களில் டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். தற்போது காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவுகளில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story