வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை


வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 27 Oct 2019 4:15 AM IST (Updated: 27 Oct 2019 1:08 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று முருகலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் விளாத்திகுளத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். மறுநாள் அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த தங்க சங்கிலிகள், கம்மல் உள்பட 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முருகலட்சுமி முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story