குமரி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
நாகர்கோவில்,
தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு டாக்டர் பணியிடங்களை அரசாணைப்படி அமல்படுத்த வேண்டும், பட்டமேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தையொட்டி அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற அத்தியாவசிய பிரிவுகளில் தேவையான டாக்டர்கள் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பணியில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பொது மருத்துவ பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் பயிற்சி டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
டாக்டர்களின் போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததாக போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 400 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story