மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சாவு
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.
மேட்டூர்,
மேட்டூரில் உள்ள சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்தார். ஒரு பாறையில் அமர்ந்து அவர் மீன் பிடித்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது இளங்கோ பாறையில் கால் வழுக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்து காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் இளங்கோவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கும், கருமலைக் கூடல் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடல் மீட்பு
அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளங்கோவை தேடினர். அங்கிருந்த மீனவர்களும் தேடினர்.
ஆனால் அனைவரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பது நேற்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலம் கேம்ப் பகுதியில் உள்ள காவிரியாற்றில் இளங்கோவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன இளங்கோவிற்கு மலர்விழி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story