மாவட்ட செய்திகள்

வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை + "||" + Farmers suffer due to monsoon rains

வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை

வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை
வேப்பந்தட்டை பகுதியில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இதில் பலர் கிணற்றுப்பாசனத்தை பயன்படுத்தியும், மேலும் பலர் மழையை நம்பியும் அதாவது மானாவாரி நிலத்தில் பயிர் செய்தும் வருகிறார்கள். இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புயல் மழை மற்றும் பருவமழை பெய்தபோதெல்லாம் வேப்பந்தட்டை பகுதியில் போதிய மழை பெய்யாமல் லேசான மழை மட்டுமே பெய்தது.


அதாவது மானாவாரி பயிருக்கு ஏற்ற வகையில் லேசான அளவே மழை பெய்து உள்ளது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பெரும்பாலான ஊர்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் வேதனை

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவ மழை பெய்து பெரும்பாலான அணைகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் வேப்பந்தட்டை பகுதி உள்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததால் ஒரு சில ஏரி, குளங்கள் கூட நீர் நிறையாமல் வறண்டு காணப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த வாரம் பெய்த லேசான மழையை நம்பி பாசன விவசாயிகள் பலர் நெல் பயிரிட்டு உள்ளனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்யவில்லையென்றால், பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மணல் திருட்டால் திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணைக்கு ஆபத்து விவசாயிகள் கவலை
தொடர் மணல் திருட்டால் திருமணஞ்சேரி காட்டாற்று தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாழாகும் என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
2. அக்னி ஆற்றில் மணல் கடத்தல்: ரூ.7½ கோடியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஆபத்து விவசாயிகள் கவலை
அக்னி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் ரூ.7½ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.
3. மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
மழையால் சேதம் அடைந்த கரும்பு வயல்களை சீரமைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சேதம் அடைந்த கரும்பு வயல்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. ரூ.39 கோடி நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு
பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு வழங்க வேண்டிய ரூ.39 கோடி நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து, சர்க்கரை ஆலை ஆண்டு பேரவை கூட்டத்தி லிருந்து கரும்பு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
5. தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின கதிர்வந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டன. கதிர்வந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.