தீபாவளி பண்டிகையையொட்டி, 2 நாட்களில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி, 2 நாட்களில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 29 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ரூ.22 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.82 லட்சம் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர்,

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தற்போது பண்டிகை என்றாலே அதில் மதுவும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. குடிமன்னர்கள் பண்டிகையை வழக்கத்தை விட அதிகமாக மதுஅருந்தி கொண்டாடுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 154 அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.3 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்று வருகிறது. பண்டிகை காலங்களில் மட்டும் அதுவும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு போன்ற நாட்களில் இதன் விற்பனை இருமடங்கு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டை விட அதிகம்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்றும் அதற்கு முதல் நாளும் என 2 நாளில் ரூ.14 கோடியே 46 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 2 நாளில் ரூ.14 கோடியே 66 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.20 லட்சம் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த 2 நாளில் மட்டும் சராசரியாக ரூ.7 கோடியே 33 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதாவது வழக்கமாக விற்பனை நடைபெறும் நாளை விட ரூ.3 கோடியே 58 லட்சம் அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட மேலாளர் ஏழுமலை தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 100 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான மது விற்்பனை செய்யப்படும். புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை என்றால் மதுப்பிரியர்களின் அதிகபட்ச கொண்டாட்டத்தின் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது விற்்பனை பல மடங்கு நடைபெறும்.

ரூ.7 கோடியே 62 லட்சம்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலான மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகை முதல் நாளன்று ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பிலும், தீபாவளி அன்று ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்்பிலும் என மது, பீர் வகைகள் மொத்தம் ரூ.7 கோடியே 62 லட்சம் மதிப்பிலான மதுவகைகள் விற்பனையானது. சென்ற ஆண்டு ரூ.7 கோடி விற்பனையான நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. 

Next Story