ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர்
குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்ததை தொடர்ந்து ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகள் செய்தனர்.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில், ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாக போற்றப்படும் இக்கோவிலை, பக்தர்கள் குருபகவான் கோவில் என்று அழைக்கிறார்கள். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும்.
பார்க்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்து ரட்சித்தமையால் இத்தலத்து இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது. காசி ஆரண்யம், திருஇரும்பூளை என்ற பெயர்களும் ஆலங்குடிக்கு உண்டு. அசுரர்களால் தேவருக்கு நேர்ந்த இடுக்கண்களை களைந்து காத்தமையால் இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு கலங்காமற் காத்த விநாயகர் என்ற பெயர் உண்டாயிற்று.
குருப்பெயர்ச்சி விழா
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குரு பகவான் இன்று(செவ்வாய்க் கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார்.
இதனை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை குருப்பெயர்ச்சி நடந்தபோது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பஞ்சமூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தங்க கவசத்தில் குருபகவான்
முன்னதாக குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.
குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
மகாதீபாராதனை
அதிகாலை 3.49 மணிக்கு குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்த நேரத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் குரு கோஷங்களை எழுப்பி குருபகவானை தரிசனம் செய்தனர்.
குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆலங்குடி பகுதியில் நேற்று பகலில் மட்டுமல்லாது இரவிலும் தொடர்ந்து மழைபெய்த வண்ணம் இருந்தது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இவ்வாறு வந்த பக்தர்கள் இன்று அதிகாலை கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு குருபகவானுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகளை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
லட்சார்ச்சனை
குருப்பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி முடிய நடந்தது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் வருகிற 31-ந் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 7-ந் தேதி முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.

Related Tags :
Next Story