கூத்தாநல்லூர் அருகே மது அதிகமாக கேட்டதால் இருதரப்பினர் மோதல் 2 பேர் கைது
கூத்தாநல்லூர் அருகே மது அதிகமாக கேட்டதால் இருதரப்பினர் மோதி கொண்டனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள ராஜாங்கட்டளை மேல தெருவைச்சேர்ந்தவர் அஜீத்(வயது 20), அதேபகுதியை சேர்ந்தவர் சேதுராமன்(24).இவர்கள் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் ராஜாங்கட்டளையில் உள்ள ஒரு இடத்தில் நேற்று மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அஜீத் தனக்கு அதிகமாக மது ஊற்றி தர வேண்டும் என்று சேதுராமனிடம் கேட்டுள்ளார். அதற்கு சேதுராமன் அதிகமாக மது தர முடியாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அஜீத்துக்காக ஒரு தரப்பினரும், சேதுராமனுக்காக ஒரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் உருட்டை கட்டையால் தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அஜீத் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும்,சேதுராமன் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் கைது
இதுகுறித்து இருதரப்பினர் புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார், அஜித், சேதுராமன், ஜெனிபர், வேதையன், கார்த்திகேயன், புவியரசன், சுந்தர்ராஜன், நடராஜன் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெனிபர்(21), வேதையன்(50) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story