விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி


விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பசுபதி (வயது 21). இவர் தனது நண்பரான வி.குமாரமங்கலத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பிரம்மா (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது விருத்தாசலத்தில் இருந்து கம்மாபுரம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கார்கூடல் அருகே சென்றபோது அந்த பஸ் கண் இமைக்கும் நேரத்தில், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில்மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டுபலத்த காயம் அடைந்த பசுபதி, பிரம்மா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி அறிந்தஅவர்களது உறவினர்கள்பதறியடித்துக் கொண்டு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் பார்த்துகதறி அழுதனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம்விசாரணை நடத்தினர்.

பின்னர் பசுபதி, பிரம்மா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story