உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி


உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் பிரேமலதாவிஜயகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 4:45 AM IST (Updated: 30 Oct 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது என்று, சுவாமிமலையில் பிரேமலதாவிஜயகாந்த் கூறினார்.

கபிஸ்தலம்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் இல்லத்துக்கு நேரில் சென்று அவனது பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன். மேலும் தே.மு.தி.க. சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. சுஜித் மரணத்தை அரசியலாக்க வேண்டாம். சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது யாரும் எந்த குறையும் கூறவில்லை. ஆனால் இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.

உள்ளாட்சி தேர்தல்

திருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நடத்த முடிவு செய்தோம். ஆனால் கட்சி தொண்டர்கள் அதை ஒரு மாநாடாக நடத்தி காட்டினார்கள். விக்கிரவாண்டி மற்றும் திருப்பூரில் கேப்டன் விஜயகாந்த் வருகை தந்து பேசியது போல உள்ளாட்சி தேர்தலிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. டாக்டர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண

முதல்- அமைச்சர் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுப்பார். பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை அதை அமைத்தவர்களே மூட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தேவையற்ற ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள்உடனிருந்தனர்.

Next Story