மாவட்ட செய்திகள்

புவனகிரியில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம் + "||" + In Puvanakiri, Tractor collision on motorcycle; Death new groom

புவனகிரியில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்

புவனகிரியில், மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; புதுமாப்பிள்ளை பலி - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்
புவனகிரியில் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். திருமணமான 3 மாதத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்தவர் சின்னராசு (வயது 31). இவருடைய மனைவி தீபா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் சொந்தவேலை காரணமாக சின்னராசு புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

புவனகிரி அய்யனார் கோவில் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை அவர் முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சின்னராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்த தீபா மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து சின்னராசுவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே விபத்து குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சின்னராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருமாம்பாக்கத்தில் பயங்கர விபத்து: அரசு ஜீப், ஆம்புலன்ஸ் மோதல்; முதியவர் பலி - பெண் டாக்டர் உள்பட 5 பேர் படுகாயம்
கிருமாம்பாக்கத்தில் அரசு ஜீப்பும்-ஆம்புலன்சும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் முதியவர் பலியானார். பெண் மருத்துவர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. திருமானூர் அருகே பரிதாபம்: தாய்-சேய் நல வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
திருமானூர் அருகே தாய்-சேய் நல வாக னம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப மாக இறந்தனர்.
3. சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது: சினிமா துணை இயக்குனர் பலி - உளுந்தூர்பேட்டையில் சம்பவம்
உளுந்தூர்பேட்டையில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், சினிமா துணை இயக்குனர் பலியானார்.
4. லாரி–மோட்டார்சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி ; லிப்டு கேட்டுச்சென்ற 2 வாலிபர்கள் படுகாயம்
சோளிங்கர் அருகே லாரி–மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. தோவாளை அருகே விபத்து பஸ்சின் அடியில் சிக்கி 1 மணி நேரம் உயிருக்கு போராடிய முதியவர்
தோவாளை அருகே மொபட் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் பஸ்சின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர், 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.