சுஜித்தின் பெற்றோருக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் தே.மு.தி.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்


சுஜித்தின் பெற்றோருக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் தே.மு.தி.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பகல் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களது குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை நிவாரண உதவியாக வழங்கினார்.

மணப்பாறை,

குழந்தை சுஜித் இறந்தது தமிழகத்துக்கு கருப்பு தீபாவளி. குழந்தை இறந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் உலகத்தையே உலுக்கி இருக்கிறது. 4 நாட்கள் போராட்டத்துக்கு பிறகுகூட சுஜித்தை உயிருடன் மீட்க முடியாததில் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. சுஜித்தை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஒரு சின்ன கவனக்குறைவு ஒரு உயிரை பலி வாங்கி இருக்கிறது. குழந்தையை காப்பாற்ற அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். ஆழ்துளை கிணறுகளை மூட கடுமையான சட்டங்கள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் எதிர் கருத்துக்களை தான் சொல்வார். இறப்பில் கூட அரசியல் செய்வது தி.மு.க.வும், ஸ்டாலினும் தான். குறை சொல்வதை விட்டு, விட்டு இதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தையை மீட்கும் நேரத்தில் கடவுளை பற்றியும், மரணத்தை பற்றியும் குறை சொல்லுவது தவறான விஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story