உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஓட்டல்கள்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வந்தனர். இதையடுத்து அனைத்து வார்டுகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் குறைந்து இருந்தது. இதனால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செல்லும் பொதுமக்கள் துணிபைகளை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இறைச்சி கடைகளில் பழைய முறைப்படி இறைச்சிகளை இலை மற்றும் பாத்திரங்களில் வைத்து விற்பனை செய்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகள், ஜவுளி கடைகள், குறிப்பாக அங்குள்ள மெயின் பஜார் வீதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினர்.
இதன் காரணமாக பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளின் ஓரங்களில் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் குவிந்து கிடந்தன. இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கடைகளில் மீண்டும் சோதனை செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






