கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:00 AM IST (Updated: 30 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் நேற்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் 5-வது நாளாக ஈடுபட்டு வரும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் நேற்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் பிரேம்நாத் முன்னிலை வகித்தார். டாக்டர் அருண்பிரசன்னா கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் ஜெயங்கொண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த அரசு டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் இந்துமதி நன்றி கூறினார்.


Next Story