சிங்கம், புலி முகமூடி அணிந்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சிங்கம், புலி முகமூடி அணிந்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு சிங்கம், புலி முகமூடி அணிந்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புருஷோத்தமன், சிவா, அய்யாயிரம், பழனிசாமி, சம்பத் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குடிமராமத்து பணியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊழல்கள் செய்கின்றனர். 100 நாள் வேலை திட்டப்பணிக்கு கமிஷன் பெறுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய கலெக்டருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story