மாவட்ட செய்திகள்

செங்கப்பட்டியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது + "||" + Prizes were awarded to the winners of the Kabaddi Competition at Chekbar

செங்கப்பட்டியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

செங்கப்பட்டியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
தீபாவளியையொட்டி அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் தீபாவளியையொட்டி ஆண்டுதோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருமயம், இலுப்பூர், கீரனூர், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 35-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது.


பரிசு

இதில் முதல் பரிசை கீரனூர் அணியும், 2-வது பரிசை ஆலத்தூர் குறிஞ்சிப்பட்டி அணியும், 3-வது பரிசை பெருமநாடு அணியும், 4-வது பரிசை தஞ்சாவூர் அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்கப்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தொடங்கி, நடந்து வருகின்றன.
2. செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
செங்கோட்டையில் காவல் துறை மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
3. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
4. நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி 957 பேர் பங்கேற்பு
நாமக்கல்லில் நேற்று ஆசிரிய, ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் 957 பேர் கலந்து கொண்டனர்.
5. தஞ்சையில் 2-வது நாளாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி 600 பேர் பங்கேற்பு
தஞ்சை மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தஞ்சையில் 2-வது நாளாக நேற்று நடந்தது. இதில் 600 பேர் கலந்து கொண்டனர்.