பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு டாக்டர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு டாக்டர்கள் 6-வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 31 Oct 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் அரசு டாக்டர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பு பணி யிடங்களுக்கு முறையான வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும், காலமுறை ஊதிய உயர்வு-பதவி உயர்வு வழங்கிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று 6-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரூர் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகிற டாக்டர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வார்டில் சிகிச்சை

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கரூர் அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் அமர்ந்து இருந்தனர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் டாக்டர் சிவராமன் தலைமை தாங்கினார். டாக்டர் விஜயகுமார், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனினும் அவசரசிகிச்சை பிரிவு, காய்ச்சல் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story