தீபாவளி பட்டாசு வெடித்ததில் இளம்பெண்ணின் கண் பார்வை பாதிப்பு போலீசில் பரபரப்பு புகார்


தீபாவளி பட்டாசு வெடித்ததில் இளம்பெண்ணின் கண் பார்வை பாதிப்பு போலீசில் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:15 PM GMT (Updated: 31 Oct 2019 5:53 PM GMT)

தீபாவளி பட்டாசு வெடித்ததில் இளம்பெண்ணின் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக இளைஞர்கள் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை அரும்பாக்கம் அன்னை சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி கலைவாணி (வயது 28). தீபாவளி பண்டிகை தினத்தன்று தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இளைஞர்கள் சிலர் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அவர்கள் சாலையில் வீசிய பட்டாசு கலைவாணியின் முகத்தில் பட்டு வெடித்துவிட்டது. இதில் கலைவாணியின் கண்ணில் காயம் ஏற்பட்டது.

அவர் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவனக்குறைவாக பட்டாசு வெடித்த இளைஞர்கள் மீது சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story