தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடிப்பு அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 57 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடிப்பு அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 57 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 1 Nov 2019 4:30 AM IST (Updated: 1 Nov 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நீடித்தது. அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 57 மி.மீ. மழை பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்து வருகின்றன. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றன. நேற்று காலை மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. நேற்று 4-வது நாளாக அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இதேபோல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பேராவூரணி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 57, மதுக்கூர் 55, குருங்குளம் 53, பூதலூர் 49, வெட்டிக்காடு 47, பேராவூரணி 44, வல்லம் 44, திருக்காட்டுப்பள்ளி 42, ஈச்சன் விடுதி 40, பட்டுக்கோட்டை 39, மஞ்சளாறு 30, திருவையாறு 27, பாபநாசம் 27, நெய்வாசல்தென்பாதி 22, கும்பகோணம் 18, அய்யம்பேட்டை 15, தஞ்சை 14, கல்லணை 14, அணைக்கரை 14, திருவிடைமருதூர் 13, ஒரத்தநாடு 10.

Next Story