செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் செல்போனில் படம் எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் அரண்மனைப்புதூரை சேர்ந்தவர் முகமது சுல்தான்(வயது 26). இவர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் 16 வயது சிறுமியும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளாள். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முகமது சுல்தான் அந்த சிறுமியை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள் ளார். பின்னர் சிறுமியுடன் நெருக்கமாக இருந்தபோது, அந்த சிறுமிக்கு தெரியாமல் செல்போனில் படம் எடுத்த முகமது சுல்தான், அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மனம் வெறுத்த அந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கினாள். சிறுமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஷீலா இதுகுறித்து போக்சோ பிரிவின் கீழ் முகமது சுல்தான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.
இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முகமது சுல்தானுக்கு ஆயுள் தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story