நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கும் பணி தொடக்கம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 9:22 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் இருந்து 1,568 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 3,168 வாக்குப்பதிவு எந்திரங்கள் நாமக்கல் கொண்டு வரப்பட்டன. இவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன.

சரிபார்க்கும் பணி

இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள விவரங்களை அழித்து சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியில் பெங்களூருவை சேர்ந்த 15 என்ஜினீயர்கள் ஈடுபட்டனர்.

இப்பணி இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு விடும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story