அதிகாரியை கண்டித்து மேட்டூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை


அதிகாரியை கண்டித்து மேட்டூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 1 Nov 2019 4:00 AM IST (Updated: 1 Nov 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட கூலிலைன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேட்டூர்,

மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட கூலிலைன் பகுதியில் சாக்கடை கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுக்க, அந்த பகுதி பொதுமக்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த துப்புரவு ஆய்வாளர் அங்குமுத்து என்பவர் சரியாக பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், கூலிலைன் பகுதியில் கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் பாதிக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாக புகார் அளிக்க வந்தால், துப்புரவு ஆய்வாளர் பொறுப்பின்றி பதில் அளிக்கிறார். எனவே அவரை கண்டித்து முற்றுகையில் ஈடுபட்டோம் என்றனர்.

Next Story