மாவட்ட செய்திகள்

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி + "||" + Near the Padappai motor cycle Truck collision The plaintiff kills

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி

படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி
படப்பை அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதியதில், வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவருடைய மகன் பாலாஜி என்கிற சோனு (வயது 22). இவர் ஓரகடம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். செரப்பனஞ்சேரி வெள்ளரித்தாங்கல் அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. படப்பை அருகே சாலையில் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
படப்பை, வஞ்சூவாஞ்சேரி, செரப்பனஞ்சேரி, கரசங்கால் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றி திரிவது தொடர் கதையாக உள்ளது.
2. 2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம்: வீடியோ ‘வைரல்’ ஆனதால் பிடித்து அபராதம்
2 பேர் குளித்துக்கொண்டே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வீடியோ ‘வைரல்’ ஆனதால், அவர்களை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.
3. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில், நல்ல பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு
தேனி-பெரியகுளம் சாலை விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் இருந்து நல்ல பாம்பு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. படப்பை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
படப்பை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
5. படப்பை அருகே 10-ம் வகுப்பு மாணவன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை
படப்பை அருகே வீட்டின் மின்விசிறியில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை