பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்


பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 3 Nov 2019 4:00 AM IST (Updated: 3 Nov 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி சூரசம்ஹார விழா தொடங்கியது.

அரியலூர்,

அரியலூரில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 28-ந் தேதி சூரசம்ஹார விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தி, மயில், ஆடு உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரனை முருகன் வதம் செய்யும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் முருகப்பெருமான் கையில் வேல், சேவல் கொடியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கோவில் பிரகாரத்தை வலம் வந்து கையில் வேலுடன் சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டார். சிங்கமுகம், யானைமுகம் என பல வேடத்தில் வந்த சூரனை வதம் செய்த முருகன் கடைசியாக மனித முகத்தில் வந்த சூரனை அழிக்கப்பட்ட பின் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story