கந்தசஷ்டி விழாவை யொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கந்தசஷ்டி விழாவை யொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:30 PM GMT (Updated: 2 Nov 2019 8:17 PM GMT)

கந்தசஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விசேஷங்களில் கந்த சஷ்டி ஒன்றாகும். நேற்று கந்த சஷ்டி விழாவை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், கந்த சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அதிகாலை முருகனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் நெய் விளக்கேற்றி வேண்டுதல் நிறைவேற்றினார்கள்.

முருகன் கோவில்கள்

மேலும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதே போல ஜெகதேவி முருகன் கோவில், ஓசூர் வேல்முருகன் கோவில், அகரம் முருகன் கோவில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story