மாவட்ட செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் + "||" + Priority should be given to students of Tamil Nadu Central University on reservations

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த கலை இலக்கிய பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் நாகை செல்வராசு எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளர் அன்பு, மாநில பொதுச்செயலாளர் காமராசு, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார்.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை

தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை திரும்பபெற வேண்டும். 5, 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்ற முடிவை கைவிட வேண்டும். தமிழ்நாடு நாள் நவம்பர் 1-ந்தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும், இட ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலை இலக்கிய பெருமன்றத்தின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட பொருளாளர் அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோவையில் நடந்த மனிதநேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.