உடன்குடி வட்டார பகுதியில், இந்த ஆண்டாவது குளங்கள் நிரம்புமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு


உடன்குடி வட்டார பகுதியில், இந்த ஆண்டாவது குளங்கள் நிரம்புமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 4 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வட்டார பகுதியில் உள்ள குளங்கள் இந்த ஆண்டாவது நிரம்புமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் ஆண்டுக்கு ஆண்டு பருவமழை குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு கோடை மழை இந்த பகுதியில் பெய்யவே இல்லை. தற்போது பருவமழை தொடங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. ஆனால் உடன்குடி வட்டார பகுதியில் மழை பெரிய அளவில் பெய்யவில்லை.

உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட சடையநேரி குளம், தாங்கை குளம், தருவை குளம் மற்றும் கல்லாநேரி, புல்லாநேரி, வண்ணார் குட்டை போன்ற ஏராளமான குட்டைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. கால்வாய் மூலமும் தண்ணீர் வரவில்லை.

இருந்த போதும் பல ஆண்டுகளாக முழுமையாக நிரம்பாத குளங்கள் மற்றும் குட்டைகள் இந்த ஆண்டாவது நிரம்புமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுமா என்றும், கடல் நீர்மட்டம் விவசாய நிலங்களில் ஊடுருவது தடுக்கப்படுமா? என்றும் விவசாயிகள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Next Story