பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்


பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 5 Nov 2019 4:30 AM IST (Updated: 4 Nov 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் ஒரு வீட்டு உபயோக பொருட்கள் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது கடையில் யாரும் இல்லை. இதனால் தீயின் வேகம் அதிகரித்து கடை முழுவதும் பரவியது.

இது குறித்து கடை உரிமையாளர் குமரன் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ரூ.5 லட்சம் பொருட்கள்

இருப்பினும் கடையில் இருந்த மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, இஸ்திரி பெட்டி உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீப்பிடித்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story