மாவட்ட செய்திகள்

சிறுவாணி அணையின் நீர்க்கசிவை அடைக்க ரூ.5 கோடியில் திட்டம் -அடுத்த வாரம் பணியை தொடங்க கேரள அரசு முடிவு + "||" + The nirkkacivai shut off Siruvaani Rs.5 crore project

சிறுவாணி அணையின் நீர்க்கசிவை அடைக்க ரூ.5 கோடியில் திட்டம் -அடுத்த வாரம் பணியை தொடங்க கேரள அரசு முடிவு

சிறுவாணி அணையின் நீர்க்கசிவை அடைக்க ரூ.5 கோடியில் திட்டம்  -அடுத்த வாரம் பணியை தொடங்க கேரள அரசு முடிவு
சிறுவாணி அணையின் நீர்க்கசிவை அடைக்க ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணியை அடுத்த வாரத்தில் தொடங்க கேரள அரசு முடிவு செய்து உள்ளது.
கோவை,

கேரளவனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை மூலம் கோவைமாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வழியோரத்தில் உள்ள 22 கிராமங்களுக்கும் குடிநீர்வினியோகம் செய்யப்படுகிறது. 50 அடி உயரம் கொண்ட இந்தஅணை கேரள வனப்பகுதியில் இருப்பதால் அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது.

அதற்காக தமிழகம் சார்பில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் எப்போதும் இல்லாதஅளவுக்கு பருவமழைபெய்தது. இதனால்அணைக்கு தண்ணீரின்வரத்து அதிகமாக இருந்தது.

ஆனால் கேரளாவில் உள்ள அணைகளில் முழு கொள்ளளவில் இருந்து 5 அடியை குறைத்தே தண்ணீரை தேக்க வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டதால், சிறுவாணி அணை 45 அடியை தாண்டியதும், அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

அதுபோன்றுவடகிழக்கு பருவமழையும்பரவலாக பெய்ததால்அணைக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 46 அடியாகஇருக்கிறது. அணையில் இருந்து நேற்று குடிநீருக்காக 10 கோடியே 10 லட்சம்லிட்டர் தண்ணீர்எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அணையின்முன்பகுதியில் உள்ளமதகு பகுதிகளில் நீர்க்கசிவு இருந்து வருகிறது. பெரிய அளவில் கசிவு இல்லை என்றாலும், தொடர்ந்து ஏற்பட்டு வரும் நீர்க்கசிவு காரணமாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி வருகிறது. எனவே அதை அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக தமிழக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகளும் கேரள அரசை வலியுறுத்தினார்கள். அதன்படி கேரள அரசு அதிகாரிகள் திட்ட அறிக்கையை தயாரித்தனர். அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டு உள்ளது. எனவே விரைவில் அதை சரிசெய்யும் பணியை கேரள அதிகாரிகள் தொடங்க உள்ளனர். இதுகுறித்து தமிழக குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சிறுவாணிஅணை கடந்த 1981-ம் ஆண்டில் கட்டப்பட்டது. பெரும்பாலும் அணை கட்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டால் அதன் மதகு பகுதியில் நீர்க்கசிவு ஏற்படுவது வழக்கம். சிறுவாணி அணை கட்டப்பட்டு 38 வருடங்கள் ஆகிவிட்டது. அணையில் தண்ணீர் முழுவதுமாக இருக்கும்போது நீர்க்கசிவு பரவலாக இருக்கிறது.

எனவேரூ.5 கோடியில்அதை சரிசெய்யகேரள அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக சிமெண்டில் ரசாயன கலவை கலந்து அடைக்கப்படும். அதற்கான பணத்தை தமிழகம் தான் செலுத்த வேண்டும். முதற்கட்டமாக ரூ.3கோடி செலுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணியை செய்ய கேரளஅரசு சார்பில் தற்போது ஒப்பந்தப்புள்ளியும் விடப்பட்டு உள்ளதால் அடுத்த வாரத்தில் பணியை தொடங்க கேரள அரசு முடிவு செய்து உள்ளது. 2மாதங்களுக்குள்பணிகள் முடிக்கப்பட்டு விடும். நீர்க்கசிவை சரிசெய்யும் பணி முடிந்ததும்மீதமுள்ள தொகையை தமிழ்நாடுகுடிநீர் வடிகால் வாரியம் கேரளஅரசுக்கு செலுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? - பந்தளம் அரச குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
சபரிமலை கோவில் நகைகளை ஏன் கேரள அரசிடம் ஒப்படைக்கக்கூடாது? பந்தளம் அரச குடும்பத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
2. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: 22-ந்தேதி விசாரணை
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.