உயர்மின் கோபுரத்தால் 13 மாவட்டங்களில் பாதிப்பு: நீதி கேட்டு 18-ந்தேதி 50 இடங்களில் சாலை மறியல்


உயர்மின் கோபுரத்தால் 13 மாவட்டங்களில் பாதிப்பு: நீதி கேட்டு 18-ந்தேதி 50 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நீதி கேட்டு 18-ந்தேதி 50 இடங்களில் சாலை மறியல் நடத்தப்படும் என விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னிமலை, 

உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டியக்க நிர்வாகி பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* 1,000 பேர் கலந்து கொள்ளும் மிகப்பெரிய போராட்டத்தை கட்டமைப்பது.

* ஊர்க்கூட்டங்கள் 10 மையங்களில் நடத்துவது.

* மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கம் நடத்துவது.

* அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல இயக்கங்களை போராட்டத்தில் இணைப்பது.

* உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் வருகிற 18-ந் தேதி சென்னிமலை உள்பட 50 இடங்களில் நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சண்முகம், கூட்டியக்க செய்தி தொடர்பாளர் கவின், ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் சென்னிமலை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி பொறுப்பாளர் செல்வராசு, புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் சரவணன், ஈரோடு கிழக்கு மாவட்ட ம.தி.மு.க. இளைஞர் அணி பொறுப்பாளர் சேகர், முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் ரவி, பசுவபட்டி பெரியசாமி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story