மாவட்ட செய்திகள்

2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Who raped the student Milk Truck Driver Arrested In Bokso Law

2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
2 மனைவிகள் இருந்தநிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி, 

அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32), பால் வண்டி டிரைவர். முதலியார்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று பால் வியாபாரமும் செய்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியின் பெற்றோர் பெரும்பாலும் வீட்டில் இருப்பது இல்லை. அந்த மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடிக்கடி வீட்டுக்கு சென்று மாணவியுடன் பேசி வந்தார்.

அப்போது அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை செல்போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்த மாணவியை மிரட்டி கடந்த 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அலெக்ஸ் அடிக்கடி வந்து சென்றது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் மாணவியை சந்திக்க அலெக்ஸ் வந்துள்ளார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாணவியின் பெற்றோருக்கு தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அலெக்ஸ் மாணவியிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். உடனே அலெக்ஸ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திர சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அலெக்ஸ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். கைதான அலெக்சுக்கு ஏற்கனவே 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்காரம்: ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார்
பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது
கோவையில் 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3. 4-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் : துணை முதல்வர்- ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
பள்ளியின் துணை முதல்வர் உட்பட இரண்டு ஆசிரியர்களால் 4 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
4. சிறுமியை கடத்தி திருமணம்: பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
5. பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை - திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
பார்வையற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.