சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை


சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை
x
தினத்தந்தி 8 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டியது. இரவு சுமார் 12 மணி அளவில் பெய்யத்தொடங்கிய மழை காலை 6 மணி வரை கொட்டித்தீர்த்தது.

சிவமொக்கா,

சிவமொக்கா மாவட்டத்தில் பல இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சிவமொக்கா டவுன் பாபுஜி நகரில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் மாநகராட்சி ஆணையரும், கவுன்சிலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட பாபுஜி நகர் மற்றும் பிற பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். 

மேலும் மழை வெள்ளம் வடிவதற்காக அங்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

Next Story