பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது


பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 7 Nov 2019 10:45 PM GMT (Updated: 7 Nov 2019 7:49 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி பெரம்பலூர் தாலுகா எளம்பலூரில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் விஜயன் தலைமையிலும், குன்னம் தாலுகா அகரம்சீகூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கங்காதேவி தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகா தொண்டமாந்துறையில் (மேற்கு) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் பொது வினியோகத்திட்டம் துணைப்பதிவாளர் செல்வராஜ் தலைமையிலும் காலை 10 மணியளவில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story