மாவட்ட செய்திகள்

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் + "||" + Livestock Protection Program Camp

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்

கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் செந்தில்குமார், செல்வக்குமார், இளையராஜா, ராஜேஷ், கால்நடை ஆய்வாளர் வசந்தா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைபரிசோதனை, அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.


தொடர்ந்து நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாமில் ஆதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

தொடர்புடைய செய்திகள்

1. காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
காற்று மாசுவினால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
2. கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது இந்து முன்னணி நிர்வாகிகள், கலெக்டரிடம் மனு
கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது. அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னணி நிர்வாகிகள், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர்.
3. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
4. கிருஷ்ணகிரியில் 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி கடன் உதவிகள் கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் 522 பயனாளிகளுக்கு ரூ.150 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
5. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை