பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Nov 2019 10:15 PM GMT (Updated: 7 Nov 2019 8:06 PM GMT)

கறம்பக்குடி அருகே பட்டபகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராமன். இவரது மனைவி யோகேஸ்வரி (வயது 29). இவர் நேற்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த தாயை வழி அனுப்புதற்காக நைனான்கொல்லை பிரிவு சாலையில் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், யோகேஸ்வரி மற்றும் அவரது தாயின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, திடீரென யோகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து யோகேஸ்வரி மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்று மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிசங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story