மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் + "||" + Thiruvalluvar statue insults: In Kumbakonam, we Tamils protest

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில், நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் தொகுதி செயலாளர் வக்கீல் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார்.


மாநில இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் பேசினர். முடிவில் நகர இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

கைது செய்ய வேண்டும்

இதேபோல் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து பேராவூரணியில் உள்ள காந்தி பூங்கா அருகே திருக்குறள் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை தாங்கினார். போசு, கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் பாலசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும். பொது இடங்களில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மத அடையாளம் பூசுவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

1. வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலை மீட்பு; வாலிபர் கைது
வேளாங்கண்ணி அருகே திருட்டுபோன அம்மன் சிலையை மீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2. புதுக்கோட்டை அருகே கீரனூரில் ரூ.200 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3. பறக்கை அருகே சிவன் கோவிலில் நாகர் சிலை கொள்ளை
பறக்கை அருகே சிவன் கோவிலில் இருந்து நாகர் சிலையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.