30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வருகிற 11-ந்தேதி வேலை நிறுத்தம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வருகிற 11-ந்தேதி வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Nov 2019 10:30 PM GMT (Updated: 7 Nov 2019 10:09 PM GMT)

ரேஷன்கடை பணியாளர்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

தேவகோட்டை, 

மாவட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் விசுவநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, தமிழ்நாடு சிவில் சப்ளை பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் பணி வரன்முறை செய்ய வேண்டும். அனைத்து கூட்டுறவு ரேஷன் கடை பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் பொட்டலம் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.சி.எஸ்.சி. குடோனில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் வழங்க வேண்டும்.

எங்களது இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மேலும் எங்களது 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story