ஈத்மிலாத் ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் இன்று 144 தடை உத்தரவு
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெங்களூரு,
முஸ்லிம் சமுதாயத்தினர் நாளை (இன்று) ஈத்மிலாத் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகைக்காக பெங்களூருவில் ஊர்வலமும் நடத்துகின்றனர். ஈத்மிலாத்தையொட்டி நடைபெறும் ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவது தடுக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் விதமாக பெங்களூரு நகர் முழுவதும் நாளை (இன்று) காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்கள் விற்பனை செய்யவும், மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி கிடையாது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவு மற்றும் மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story