மாவட்ட செய்திகள்

தேவிபட்டினத்தில், கடலுக்கு செல்லும் மழைநீரை மோட்டார் மூலம் ஊருணியில் நிரப்பும் இளைஞர்கள் + "||" + In tevipattinat, Rainwater to the ocean by motor Young people filling in the carnival

தேவிபட்டினத்தில், கடலுக்கு செல்லும் மழைநீரை மோட்டார் மூலம் ஊருணியில் நிரப்பும் இளைஞர்கள்

தேவிபட்டினத்தில், கடலுக்கு செல்லும் மழைநீரை மோட்டார் மூலம் ஊருணியில் நிரப்பும் இளைஞர்கள்
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை ஊருணிக்கு திருப்பி விடும் இளைஞர்களுக்கு பாராட்டு குவிகிறது.
பனைக்குளம்,

தேவிபட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே மரைக்காயர் ஊருணி உள்ளது. இந்த ஊருணி தண்ணீரை தேவிபட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாமல் இந்த ஊருணி வறண்டு காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து நீர் நிலைகளிலும், தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் வயல்வெளிகளில் அதிகளவு தண்ணீர் நிற்பதால் அதனை விவசாயிகள் பூவோடை வழியாக திறந்து விட்டுள்ளனர். இந்த தண்ணீர் அனைத்தும் கால்வாய் வழியாக கடலுக்கு வீணாக சென்று கலக்கிறது.

இதனையறிந்த தேவிபட்டினம் துவா அமைப்பினர் அதன் ஒருங்கிணைப்பாளர் உபயதுல்லா தலைமையில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் மரைக்காயர் ஊருணிக்கு திருப்பி விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது மரைக்காயர் ஊருணி வேகமாக நிரம்பி வருகிறது.

பொதுநலன் கருதி செயல்படும் இந்த அமைப்பினரை தேவிபட்டினம் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும் பாராட்டினர். பாராட்டு குவியும் வேளையில், இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீணாகும் தண்ணீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் சேகரிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தொற்று பாதித்த இளம் அமெரிக்கர்களுக்கு எமனாக மாறுகிறது, உடல்பருமன்
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது.
2. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரேநாளில் 684 பேர் கைது: தேவையின்றி சுற்றிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார் - உறுதிமொழியும் ஏற்க வைத்தனர்
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்றதாக ஒரே நாளில் 684 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
3. பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்து, ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுத்த இளைஞர்கள்
பாம்பன் ரோடு பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி அமர்ந்து ஆபத்தான முறையில் இளைஞர்கள் செல்போனில் செல்பி எடுத்தனர்.
4. வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் - ப.சிதம்பரம் கருத்து
வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.