மாவட்ட செய்திகள்

கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம் + "||" + Wandering crowd on the beach

கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி,

புதுவை அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதனால் வார இறுதி நாட்களில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் நகர பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. புதுவை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய துறைமுகம் அருகேயும், தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பு பகுதிக்கும் சென்று கடலில் இறங்கி அலையில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


போக்குவரத்து நெரிசல்

இதே போல் சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்திவீதியிலும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது. அவர்கள் பேரம் பேசி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். புதுவை நகர பகுதிகளில் வெளிமாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்களை நேற்று அதிக அளவில் காண முடிந்தது. இதனால் நகரின் முக்கியமான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்கு வரத்தை சரி செய்தனர்.

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்று, அங்கு கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

புதுவைக்கு நேற்று சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்தனர். அவர்கள் புதுவையில் சைக்கிள் ரிக்‌ஷாவில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். புதுவை கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர்கள் சைக்கிள் ரிக்‌ஷாவில் சென்று சுற்றிப்பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
3. வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இல்லாதவாறு கண் காணிக்க வேண்டும் என உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர் சவான் கூறினார்.
4. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு
புதுவையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5¼ கோடி மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக ரூ.18.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் சமரசம் ஏற்பட்டது.
5. கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,186 வழக்குகளில் ரூ.6¼ கோடியில் தீர்வு
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,186 வழக்குகளில் ரூ.6 கோடியே 33 லட்சத்து 4 ஆயிரத்து 412 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.