மாவட்ட செய்திகள்

முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு + "||" + During First Minister's visit Went to the security mission Policeman dies in an accident

முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு

முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு
முதல்–அமைச்சரின் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர், 

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 27). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு அவர் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மனைவி பாரதி. இவரும் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கவுசிக் சர்வந்த் (4), கிஷோர் சர்வந்த் (2½) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து பவானி, ஈரோடு வழியாக நேற்று மதியம் கோவைக்கு சென்றார். அதனால் முதல்–அமைச்சர் செல்லும் வழியில் பாதுகாப்புக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

வரதராஜூம் முதல்–அமைச்சரின் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்தார். அதற்காக நேற்று மதியம் 12.30 மணி அளவில் கள்ளிப்பட்டியில் இருந்து சித்தோடுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு–சத்தி மெயின் ரோட்டில் உள்ள கரட்டடிபாளையத்தில் சென்றபோது, அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கோபிக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ்சும், வரதராஜின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து வரதராஜ் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரதராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த வரதராஜின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

முதல்–அமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்றபோது போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் இறந்தது, மற்ற போலீசாரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதிகம் வாசிக்கப்பட்டவை