திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் சாவு
திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் மேயர் சிட்டிபாபு தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் தர்ஷன் (3½). .இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் தர்ஷன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதை தொடர்ந்து தர்ஷனை அவனது பெற்றோர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று தர்ஷன் பரிதாபமாக இறந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அலட்சியத்தால்
தனியார் ஆஸ்பத்திரியின் அலட்சியத்தால் சிறுவன் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணவாளநகர், அண்ணா நகர் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் திறந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைத்து தர சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story