நாமக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்


நாமக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2019 3:45 AM IST (Updated: 15 Nov 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

ஐகோர்ட்டு உத்தரவின்படி ஜி.டி.எஸ். ஊழியர்கள் சிவில் ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும். பணிக்கொடையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் அன்பழகன், கோட்ட தலைவர்கள் நடராஜன், நல்லசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் 10 முதல் 30 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், உறுப்பினர் சரிபார்ப்பு நடத்தி தொழிற்சங்க அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அஞ்சல் ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் கோட்ட செயலாளர்கள் துரைசாமி, ஈஸ்வரன், கிளை செயலாளர்கள் ராமச்சந்திரன், ஜெகதீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அடுத்த மாதம் 12-ந் தேதி அனைத்து மாநில முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகங்கள் முன்பு தர்ணா போராட்டங்களை அஞ்சல் ஊழியர்கள் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story