பிளாஸ்டிக் பைகள் விற்பனை கடைக்காரர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்


பிளாஸ்டிக் பைகள் விற்பனை கடைக்காரர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 17 Nov 2019 3:45 AM IST (Updated: 17 Nov 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் முத்துவுக்கு நகரில் சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் முத்து தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், முகம்மது இக்பால், செந்தில் உள்ளிட்டோர் ரெயில்வே சாலை, பி.எஸ்.கே. தெரு, பூக்கடை சத்திரம் போன்ற பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சீபுரம் பி.எஸ்.கே.தெருவில் பிளாஸ்டிக் பைகள் மொத்தமாக விற்பனை செய்யும் கங்காதரன் என்பவரது கடையை சோதனை செய்து, அந்த கடையில் இருந்த ஒரு டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பூக்கடைச்சத்திரம் பகுதியில் உள்ள மளிகை கடையிலும், நூல்கள் விற்பனைக் கடையிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டு பிடித்து இரு கடைக்காரர்களிடமும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த இரு கடைகளில் இருந்தும் தலா 250 கிலோ மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story