ஊத்துக்கோட்டையில், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் - துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
ஊத்துக்கோட்டையில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் தலைமையில் நடந்தது.
ஊத்துக்கோட்டை,
டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அ.தி.மு.க., தி.மு.க. விருப்ப மனுக்கள் பெற்று வருகின்றன. பூண்டி ஒன்றியத்தில் 49 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 193 வாக்குச்சாவடிகள், 345 வார்டுகள் உள்ளன. இவற்றில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 9 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 40 ஆயிரத்து 456 ஆண் வாக்காளர்கள், 42 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
எல்லாபுரம் ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 369 வார்டுகள், 207 வாக்குச்சாவடிகள் உள்ளன. 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையானதாகவும், 16 வாக்குச்சாவடிகள் மிகவும பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 44 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 46 ஆயிரத்து 536 பெண் வாக்காளர்கள் உள்ளனா.
ஈடுக்காடு ஒன்றியத்தில் 8 ஊராட்சிகள் உள்ளன. 28 வார்டுகள், 28 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 28 வாக்குச்சாவடிகளும் மிகவும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன. 9,696 வாக்காளர்கள் உள்ளனர். ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள், 15 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 164 ஆண் வாக்காளர்கள், 5 ஆயிரத்து 383 பெண் வாக்காளர்கள் உள்ளனர். பூண்டி, எல்லாபுரம், ஈக்காடு ஒன்றியங்களில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் போலிஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலிஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலிஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு சென்று அங்குள்ள நிலவரம் ஆராயப்படும்.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் சட்ட திட்டங்களை அனைவரும் மதித்து நடக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் இணையும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், வாசுதேவன், மேலாளர் லோகநாதன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரவிசந்திரபாபு, மாலா, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மதியரசன், சப் இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, அழகேசன், வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story