தர்மபுரி, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் சு.மலர்விழி நாளை வழங்குகிறார்


தர்மபுரி, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் சு.மலர்விழி நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 19 Nov 2019 3:47 AM IST (Updated: 19 Nov 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் சு.மலர்விழி நாளை வழங்குகிறார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. விழாவில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சு.மலர்விழி கல்வி நிதியை வழங்கு கிறார்.

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் “தினத்தந்தி” மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி வந்தது.

2014-2015-ம் கல்வி ஆண்டில் இருந்து இந்த பரிசு திட்டத்தை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை தொடரும் வகையில் “தினத்தந்தி” கல்வி நிதி திட்டமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 340 மாணவ- மாணவிகள் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:- 1. எம்.மகாலட்சுமி, அரசு உயர்நிலைப்பள்ளி, பெல்லுஅள்ளி, தர்மபுரி, 2. ஜி.கார்த்திகா, அரசு மேல்நிலைப்பள்ளி, பேகாரஅள்ளி, தர்மபுரி, 3. பி.பவித்ரா, அரசு உயர்நிலைப்பள்ளி, பெல்லுஅள்ளி, தர்மபுரி, 4. எஸ்.லட்சுமிபிரியா, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரூர், 5. எம்.தமிழ்ச்செல்வி, அரசு உயர்நிலைப்பள்ளி, புதுபாலசமுத்திரம், 6. பி.சாய்சரண்யா, ஜெயம் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, எச்.தொட்டம்பட்டி, அரூர், 7. பி.சுடர்விழி, ஸ்ரீவிநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம், 8. வி.மனோஜ், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இட்லப்பட்டி, தர்மபுரி, 9. ஜெ.ஜெயப்பிரகாஷ், அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம், 10. ஏ.ரோசன்ராஜ், பி.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, அனுமந்தபுரம்.

மேற்கண்ட 10 பேர் “தினத்தந்தி” கல்வி நிதிக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சு.மலர்விழி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.முத்து கிருஷ்ணன் வாழ்த்தி பேசு கிறார். மாவட்ட கல்வி அலுவலர் இரா.பாலசுப்பிரமணி முன்னிலை வகிக்கிறார். சேலம் “தினத்தந்தி” மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்று பேசுகிறார். பள்ளி தலைமைஆசிரியை தெரசாள் நன்றி கூறுகிறார்.


Next Story